மே 05, 2011

ம. ரமேஷ் கஸல்கள் - 2


கஸல்  வடிவம் :
கஸல்  அரபியில்  அரும்பிப்  பாரசீகத்தில்  போதாகி  உருதுவில்  மலர்ந்து  மணம்  வீசும்  அழகான  இலக்கிய  வடிவம்.  ‘கஸல்’  என்றாலே  ‘காதலி’யுடன்  பேசுதல்  என்று  பெயர்.  கஸல்  பெரும்பாலும்  காதலையே  பாடும்;  அதுவும்  காதலின்  சோகத்தை. சிறுபான்மை  ஆன்மிகத்தையும்  பாடும். கஸல்  இரண்டடிக்  கண்ணிகளால்  ஆனது.  ஒரு  கண்ணிக்கும்  அடுத்த கண்ணிக்கும் கருத்துத்தொடர்பு இருக்கவேண்டும் என்ற  அவசியமில்லை.  கண்ணிகளை இணைக்க  வேண்டி  இயைபுத் தொடை, யாப்புச்  சந்தம்  மேற்கண்ட மொழிகளில் பின்பற்றப்படும். இம்முறை தமிழ்க் கஸல்களில்  பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றவும்  வேண்டியதில்லை.  ஹைக்கூ,  சென்ரியு,  லிமரைக்கூ போன்ற மேற்கத்திய  வடிவங்களைத்  தமிழ்மொழிக்கேற்ப  மாற்றங்களைச்  செய்துகொண்டது  இக்கஸலுக்கும்  பொருந்தும்.  பேச்சுச்  சந்தத்திற்காகவும்  கருத்துச்  சுதந்திரத்திற்காகவும்  அம்முறை  தமிழில்  தவிர்க்கப்படுகிறது.  எனவே  தமிழ்க்  கஸல்  புதுக்கவிதை  வடிவில்  காணப்படுவதால்  புதுக்கவிதை  ஆகிவிடாது.  தமிழில்  முதலிரண்டு  (மின்மினிகளால்  ஒரு  கடிதம்,  ரகசியப்  பூ )  கஸல்  கவிதைத்  தொகுதிகளைக் கவிக்கோ  அப்துல்  ரகுமான்  படைத்துள்ளார்.  

1 கருத்து:

  1. உங்கள் கவிதைகள் அனைத்தும் மித அருமை.. உணர்ந்து எழுதியுள்ளீர்கள்.. மேல்மேலும் எழுதிட என் இதயபூர்வ வாழ்த்துக்கள்...

    அன்பு மற்றும் அமைதியுடன்...

    Dr. R. Rajesh

    பதிலளிநீக்கு