டிசம்பர் 16, 2011

நீ மட்டும்தான் அழுகின்றாய் - கஸல்கள்


·       நாம், நம்
கஷ்டங்களை மறைக்க
கற்றுக்கொண்டோம்.
கடவுள்
நாம் பொய் பேசுவதாகக்
கணக்கு வைத்துக்கொள்கிறான்.

·       நீ
துன்பங்களையே பறிமாறிக்கொள்வதால்
நான்
இல்லாத மகிழ்ச்சியை
ஒப்படைக்கின்றேன்
(நீயாவது ஆறுதல் அடைவாய் என்று)

·       உன் கவிதைகளால்
என் குழந்தைகள் மகிழ்ந்தன
மழைக்காலங்களில்
கப்பல் செய்துவிட்டு

·       உனக்கு
ஆறுதல் தேவைப்படும்போதாவது
என்னை
அழைக்கிறாயே!
மகிழ்ச்சிதான்

·       தவித்தாலும் துடித்தாலும்
ரசிக்கிறார்கள்
காதல் கவிதைகளை
ஆனால், காதலி
நீ மட்டும்தான் அழுகின்றாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக