அக்டோபர் 03, 2012

கடவுள் 6, 7.


கடவுள் – 6

கர்ப்பக்கிரகத்தில்
நடந்து கொண்டிந்த
காமச் செயலை
இமைக்காமல்
காவல் பார்த்துக் கொண்டிருந்தார் கடவுள்!
பல ஆயிரம் பேருக்கு
அருள்பாளித்திருந்த
அந்தக் கற்சிலை கொஞ்சம் கூச்சப்பட்டது!
என்றாலும்கூட பழக்கப்பட்டதால்
தற்குச் சகஜமாகிவிட்டது!
பின்னர் ஒரு நாள் பிடிபட்டபோது,
நாத்திகன் ஒருவன் நினைத்துக்கொண்டான்
பூசாரியின் வேண்டுதலும்
லட்சத்தில் ஒன்றாகியிருக்கும்
அதனால், கடவுள்
கண்டும் காணாமலும்
விட்டுவிட்டு இருப்பார் போலும்.’!


கடவுள் – 7

கடவுளிடம் பணம் இல்லாததால்
திருட்டு ரயில் ஏறி
சென்னை வந்து இரங்கினார்.
சமாதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு
கடற்கரையில்
காதலர்களை ரசித்துவிட்டு
கோடம்பாக்கம் வந்து சேர்ந்தார்.
நடிகன் நடிகையைக்
கொஞ்சி முத்தமிட்டுக் கொண்டிருந்ததும்
கடற்கரையில் கண்டதும்
வேறுவேறாக இருந்தது.
நடிகனுக்கு அரசரமாகச்
சண்டைக் காட்சிக்கு
டூப் தேவைப்பட்டதால்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
கடவுளை பிடித்து இழுத்து!
நடிகனாக மேக்கப் செய்தார்கள்.
பைட்டர்களைத் தும்சம் செய்து
நின்றபோது ஆங்காங்கே
கடவுளுக்கு ரத்த காயங்கள்!
ஆச்சரியமாகப் பார்த்தார் கடவுள்
உண்மையான நடிகனும்
மேக்கப் ரத்தக் காயங்களோடு
மருத்துவமனை செட்டுக்குள்
நடிகை கைதாங்களாக
அழைத்துச் செல்வதுபோன்று
அடுத்தக் காட்சி படமாக்கப்பட்டது.
பேசாம இவனையே அவருக்கு
பைட்டுக்கு டூப்பாக்கி விடலாம்.
கொடுத்த 1000 ரூபாயை வாங்கிக் கொண்டு
கடவுள் வெளியேறி
கையேந்தி பவனை நோட்டமிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக