டிசம்பர் 13, 2012

ம. ரமேஷ் ஹைபுன் – 11காலை... சாலையில் போகும்போது நாய் ஒன்று இறந்துகிடந்தது. அலுவலகத்துக்கு விரையும்போதும்கூட எந்த வண்டிக்காரனோ கொன்னுட்டுப்போயிட்டான் என்று வருத்தப்பட்டுக்கொண்டு சென்றார். அலுவலகத்தில்கூட சரியாக வேலை செய்யவில்லை. மாலைதிரும்பும் வழியில் ஒரு டாஸ்மாக் கடைக்கு முன்னால் ஒருவன் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்திருந்தான். குடிக்கத்தான் அந்தப்பக்கமா அவசரமா போய் இருக்கனும்குடிக்கத்தான் போறானே அப்புறம் என்னதான் அவசரமோ அவனுக்குஇவனுங்களுக்கு எல்லாம் நல்லா வேணும்இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கப்போனார்கனவில் இறந்த அந்த நாயும் மனிதனும் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் சொர்க்கத்தில்!

நமக்கென்ன போகிறது
இறந்தவன் யாரோ
மறைந்த மனித நேயம்

(இப்படியும் எழுதலாம்புதியதாக எழுதுபவர்களுக்கான மாதிரி இது:

சொர்க்கமோ நரகமோ
இறப்பு துன்பம்தான்
இழந்தவர்களுக்கு

புதிய பேருந்து நிறுத்தங்கள்
மகிழ்ச்சியில் பயணிகள்
டாஸ்மாக் கடைகள்

அலுவல் வேலை
சரியாக நடக்கவில்லை
காலை கண்ட காட்சி

இறந்த பிறகு வருத்தப்பட
என்ன இருக்கிறது
இறந்தவன் திரும்பான்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக