ஜனவரி 29, 2013

கடவுள் – 16


இளைஞனான
கடவுள் டீவியைப் போட்டான்…
அட என்ன ஒரு விளம்பரம்!
ஒரு பொண்ண பிக்கப் பண்ணணுமுன்னா
ஒரு பைக் வாங்கினாலே போதும்போல
எப்படி லிப்ட் கேக்கிறாள் பாறேன்.
மறு நாளே
அப்பா காலேஜ் போனனுமுன்னா
பைக் வேணும்
அதுவும் இந்த மாதிரி பைக் தான் வேணும்
ஏங்க உங்க புள்ள சாப்பிடமாட்டின்றான்
சரிடா நாளைக்கு வாங்கிக்கலாம்
ஏன் இன்னிக்கே வாங்கிக் கொடுத்தா என்னவாம்
முரண்டு பிடித்தார் கடவுள்.
பைக் வாங்கியாகிவிட்டது
7 நாள் சுத்தியாகிவிட்டது
காலேஜியில் கூட படிக்கிற
பொண்ணுங்க கூட லிப்ட் கேக்கல
கோபத்தில் டீவியைப் போட்டார் கடவுள்.
அட அதே பொண்ணுதான்
இப்ப காருல லிப்ட் கேட்டு போறாளே!
ஆசை யாரை விட்டது.
அப்பாவிடம் பிட் போட்டார்
கார் வாங்கியாகிவிட்டது.
பொண்ணுங்க ரோட்டுல
நிற்பதைப் பார்த்தால் சைடாக வந்து
லிப்ட் வேணுமான்னு வாலன்டரியா கேட்டான்
எந்தப் பொண்ணும் ஏறவேயில்லை
நம்மள இந்த விளம்பரக்காரனுங்க
நல்லாதான் ஏமாத்துறானுங்களோ என்று
நினைத்துக்கொண்டே
டீவியைப் போட்டான்
அடப்பாவி அந்தப் பொண்ணு
ஆமாம் அதே பொண்ணுதான்!
மேலே போற ப்ளைட்டுக்கு
லிப்ட் கேட்பதுபோல நின்றிருந்தால்!
அப்பாவிடம் ப்ளைட் வேணுமுன்னு
கேட்க முடியாதே என்று
பஸ்லிலேயே போக ஆரம்பித்தார்
ஆச்சரியம்
முதல் பார்வையிலேயே
ஒரு பெண் சிக்கிக்கொண்டாள்!
துள்ளிக் குதிக்க நினைத்ததில்
கடவுளும் அருகில் இருந்தவனும்
பஸ் படிக்கெட்டிலிருந்து விழுந்து
பரிதாபமாகச் செத்தே போனார்கள்
அவரின் அப்பாவும் அம்மாவும்
அழுதுக் கொண்டு நின்றிருந்தார்கள்.
காரியம் முடிந்ததும்
அப்பா டீவியைப் போட்டார்
அதே பைக் விளம்பரம்
ரிமோட்டை எழுத்து வீசினார்
டீவி உடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக