ஜனவரி 30, 2013

கடவுள் - 17


ME படித்து
மாதம்ஒன் லேக் சம்பளம் வாங்கும்
மணப்பெண்ணாக மாறி
பெண் பார்க்கும் படலத்திற்காகக்
கையில் டீ கிளாஸ்களுடன் நின்றிருந்தார் கடவுள்!
இப்படி நிற்பது நான்காவது தடவையென்று
தங்கச்சிக்காரி சிரித்துக்கொண்டாள்.
அதிகம் படிச்சிட்டாகூட
மாப்பிள்ளை அமைவது கஷ்டம்தான்போல
ஒரு வழியாக மாப்பிள்ளை ஓகே சொல்ல
திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
பின்னர் அறங்கேறியது நாடகம்.
அதான் ஆச 60 நாள்
மோகம் 30 நாளுன்னு சொல்வாங்களே!
எல்லாம் முடிஞ்சதும்
ஆரம்பமானது சமையல் செய்யும் பிரச்சினை
என்னத்தான் சமையல் செய்யறையோ?
ஏன் நானும்தான் சம்பாதிக்கிறேன்
நீங்களும் சமையல் செய்யுங்கள்
பொண்ணுங்க மட்டும்தான் செய்யனுமோ?
சரி இல்லையின்னா சமையல்காரியை வைத்துக்கொள்ளலாம்.
பிரச்சினை இப்படி வந்தது:
நீங்க சமையல்காரியை வெச்சிட்ட கீறிங்கன்னு
டவுட்
லட்ச லட்சமா சம்பாதித்து என்ன பிரயோசனம்
விவாகரத்தில் வந்து நின்றது கடவுளின் வாழ்க்கை.
கணவனுக்குத் துரோகம் செய்யாத
வேலைக்காரியின் கற்பு
கலங்கப்படுத்தப்பட்டது.
வேலைக்காரியின் கணவன் சொன்னான்:
நீ ஏன்டி அழற
பாத்திரம் கழுவும்போது
உன் கைகள்தான் கறைபடும்
உன் கற்புக்கு கறை படாது!
நீ வேற வீட்ட பாரு
பையனையும் பொண்ணையும்
படிக்க வெக்க
நமக்கு வேற என்ன வேலை தெரியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக