ஜனவரி 31, 2013

கடவுள் - 18 திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டார் கடவுள்.
முதல் வேலையாக
முதிர்க்கன்னி பட்டம் தராத
40 வயது நடிகைக்குத் திருமணம் என்ற
ரகசியத் தகவலை அறிந்ததும்
அவள் வயிற்றில்தான் பிறக்க முடிவெடுத்தார்.
அப்படி முடிவெடுத்ததற்காகப் பின்னர் வருந்தினார்.
மூன்றாம் மாதம் வயிற்றில்  இருக்கும்போதுகூட
குத்தாட்டத்துக்கு ஒப்புக்கொண்டதால்
வயிற்றில் இருந்து சிரித்துக்கொண்டார் கடவுள்.
முன்னாள் நடிகையோ
குழந்தை உதைப்பதாகச் சிலிர்த்துப்போனாள்
பெண் குழந்தையாகப் பிறந்தார் கடவுள்.
பொத்தி பொத்தி வளர்த்ததில்
வளர்ந்து நின்றாள்.
அவளை நடிகையாக்கக்கூடாது என்ற
இறுக்கம் தளர்ந்தது.
முதல் படத்திலேயே
தனக்கு நண்பனாக
காதலனாக-
கணவனாக-
நான் அவனுக்குத் தாயாக
பாட்டியாக
நடித்த அந்த நடிகனுக்கு
இவள் காதலனாக நடிக்கும்
வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ந்துபோனாள்.
நான் யாரிடமும் சிபாரிசு கேட்கவில்லையென்று
செய்தித்தாள்களில் பேட்டிகள்
முதல் படம் பிளாப்
என்ன காரணம் என்று ஜோசியம் பார்த்தாள்.
கவர்ச்சி குறைவாம்.
தராளமாக்கினாள்
படங்கள் வெள்ளி விழா கொண்டாடப்பட்டன
பணத் தேவைக்காக
எல்லா மொழிப் படங்களிலும்
நடித்தான்நடித்தாள்நடித்தாள்
திருமண வயதைத் தாண்டியும் நடித்தாள்.
ஐந்தாறு நடிகன்களுடனும்
பத்து பதினைந்து தொழிலதிபர்களுடனும்
நான்கு கிரிக்கெட் வீரர்களுடனும்
கிசுகிசுக்கப்பட்டாள்
நாற்பது வயதைக் கடந்தாள்
அம்மா மாதிரியே பொண்ணுன்னு
பேசப்பட்ட சூழ்நிலையில்தான்
செய்தித்தாள்களில் முதல்பக்கச் செய்தியானாள்
தனி அறையில் தற்கொலை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக