ஏப்ரல் 10, 2013

(கேர்ள் ப்ரண்டு) ம. ரமேஷ் ஹைபுன் – 18

(கேர்ள் ப்ரண்டு) . ரமேஷ் ஹைபுன் – 18

ம்நல்லா இருக்கியா? நான்தான் பேசறேன்என்று தனக்கு உடல் நலை சரியின்றி 10 நாட்களாக மருத்துவமனையில் இருப்பதைச் சொல்லி முடித்தால் கல்லூரித் தோழி. நானும் பிரண்டுங்களும் பாக்க வரட்டுமா என்றேன். வேண்டாம் என்றாள். அன்று முதல் மனம் வருத்தத்துடனேயே இருந்தது. ஏதோ நல்ல நாளாம். மனைவி கோயிலுக்குக் கூப்பிட்டாள். குழந்தைகளோடு கோயிலுக்குச் சென்று சாமியைப் பார்த்து நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டுவிட்டு அமர்ந்தேன். சரி கிளம்பலாமா என்றேன் மனைவியைப் பார்த்து. அட அங்கப் பாருங்க உன் கேர்ள் ப்ரண்டு என்று சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தான். அதியம்தான்உடல் நிலை சரியில்லை என்ற தோழிதான் அவள். நலம் விசாரித்தேன். மருத்துவர்கள் சொன்னதைச் சொன்னாள். அதற்குப் பார்க்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றினாலும் ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட்டோமே என்பதில் மகிழ்ச்சி நிறைந்தது.

நட்பும் வாழ்க்கையும்
வேறுவேறுதான்
ஆண்களுக்கு மட்டும்

இப்படியும் எழுதலாம் என்பதற்காகச் சில முத்தாய்ப்பான ஹைக்கூக்கள்:

தொலைத்த காதலியின்
நலம் விசாரிக்கிறேன்
தோழிகளிடம்

நட்புகள்
முறித்துக்கொள்ள வேண்டும்
திருமணத்திற்கு பின் பெண்கள்

நலம் விசாரித்தேன்
சந்தேகக் கண்
கணவன்

அன்றுபோல் இன்றும்
போடா வாடா என்கிறார்கள்

கல்லூரித் தோழிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக