ஜூன் 08, 2013

காவல் பொம்மை - ம. ரமேஷ் ஹைக்கூ

மழையின் அழிவில்
மகிழ்ச்சி கொண்டாட்டம்
வானவில்

ஒற்றுமையின் வலிமை
சிறிது நேரத்தில் முறிந்தது
மறையும் வானவில்  

அத்தனை பேர் மனசையும்
வாட்டுகிறது
மெதுவாக வீசும் காற்று

வாச்மேன் இருந்தும் கொள்ளை
எப்படி காவல் காக்கும்
வயல்வெளியை காவல் பொம்மை

வண்டி ஓட்டி மகிழ்கிறது
குழந்தைகள் மனம்

கையில் சோளக்கம்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக