ஆகஸ்ட் 07, 2013

நட்பு என்னும் கற்பு!!!

உனக்குப் போயி
எப்பிடிடா செட் ஆயிச்சி…
அவ தான்டா மச்சி என் காதலி…
லவ் செட்டாயிடுச்சி
மச்சி ட்ரீட் எப்படா?
இப்ப வருவா பாரு என் லவ்வரு…
இன்னிக்கு
பீச் போவலாமுன்னு இருக்கோம்…
நாம சினிமாவுக்குப் 
போவலாமான்னு கேட்டுட வேண்டியதுதான்...
வண்டியில பின்னாடி உட்காந்து வந்தாளே
அவளாடா உன் செட்டப்பு…
என்கூட மட்டும்தான் 
அவ சிரிச்சி சிரிச்சி பேசுவா…
எனக்காக  உயிரையும் கொடுப்பா…
இப்படிச்  சுட்டிக்காட்டும்
எல்லா பெண்ணும் - ஒருத்தியே!
நட்பென்னும் கற்பு என்றுதான்
அவள் பழகிவருகிறாள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக