பிப்ரவரி 11, 2014

என்னை மன்னித்திடு (கஸல்)

மணவறையில்
சம்பிரதாயங்களுக்காக
அடிக்கடி
கையெடுத்துக் கும்பிடவில்லை
‘என்னை மன்னித்திடு
என்னை மன்னித்திடு’ என்று
உன்னிடம் கெஞ்சிக் கொண்டுள்ளேன்

நான் தூவியது
அர்ச்சதை அல்ல
என் கண்ணீர்த் துளிகள்

தாலிக் கட்டிக்கொண்டு
சுட்டுவிரல் கோர்த்து
மூன்றாவது முறையாக
மணவறையை வளம் வந்து
மணமகள் அறைபோகிறாய்
நம் காதலுக்கு

கொள்ளி வைத்துவிட்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக