மே 24, 2014

கடவுள் - ஸ்டேட் பஸ்ட்! டாக்டராகி இலவச சேவை!!!

ஆணாகப் பிறந்தால்
நன்றாகப் படிக்கமுடியாது என்றெண்ணி
பெண்ணாகப் பிறக்க நினைத்து
பெண்ணாகப் பிறப்பது பாவமென்று எண்ணி!
ஆணாகப் பிறந்தார் கடவுள்!
அரசு பள்ளியில் சேர மறுத்து
தனியார் பள்ளியில் சேர்ந்தார்.
ப்ரி கேஜியிலிருந்தே
விழுந்துவிழுந்து படிக்கத் தொடங்கினார்.
பத்தாவதில்
ஸ்டேட் பஸ்ட்498/500 எடுத்தார்!
தனியார் பள்ளிக்கூடம் கல்விக்கட்டணமின்றி
இலவசமாகச் சேர்த்துக்கொண்டது!
பன்னிரண்டாவதில் நீங்கள் நினைப்பதுபோலவே
ஸ்டேட் பஸ்ட்1196/1200 எடுத்தார்!
மீடியாக்கள் சூழ்ந்துகொண்டன!
பேட்டி கொடுத்தார்இலவச மருத்துவம் என்றார்
தொலைக்காட்சியைப் பார்த்த மக்கள்
மெய்ச்சிலிர்த்துப்போயினர்இலவச மருத்துவமாம்.
கவர்ன்மென்ட்டில் ஈஸியாக சீட்  கிடைத்தது!
முதலாமாண்டும் கவனமுடன் படித்தார்!
இரண்டாமாண்டில் விழுந்தார் காதலில்!!
மூன்று, நான்கு என்று கடந்து
பிரைவேட் மருத்துவமைனையில்
மருத்துவராகிவிட்டார்.
கிராமப்புறத்தில் ஓராண்டு மருத்துவம் பார்க்க
முடியாது என் போராட்டத்திற்கு
தலைமை வகித்தார்!
தனியார் மருத்துவமனை என்பதால்
உன்னால் இவ்வளவு வருமானம்
வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்!
தேவையில்லாத எல்லாவற்றுக்கும்
ஸ்கேன், டெஸ்ட், மருந்து, மாத்திரையென்று
எழுதி கொடுத்தார்!
அந்த இலவச சேவை என்ற வார்த்தையை
மறந்தே போனார்!
காதலி வீட்டில் வரதட்சணையாக
மருத்துவமனையே கட்டி
கல்யாணம் செய்து வைத்தார்கள்.
கடவுள் மருத்துவமனையில்
கடவுள் ஷீப் டாக்டராக அமர்ந்தார்.
போட்ட பணத்தை எடுக்கவேண்டுமென்று
எல்லா மருத்துவமனைகள் போலவே
கடவுள் மருத்துவமனையும் மாறிப்போனது.
மனைவியோடு செய்தி பார்க்க
விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டனர்!
ஸ்டேட் பஸ்ட் மாணவன் சொன்னான்:
டாக்டராகி இலவச சேவை…”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக