ஏப்ரல் 23, 2015

விளக்கிவிட்டு அணைத்தல்

பயணமொன்றில் பாலியல் தொல்லை
பொருத்துக்கொண்டு
நிறுத்தமொன்றில் இறங்கியவள்
அறைகுறை வெளிச்சத்தில்
பத்து பதினைந்து
ஆண்களும் பெண்களும்
அறைகுறை ஆடைகளுடனும்
கையில் மது பாட்டில்களுடனும்
இருந்தவர்களோடு சேர்ந்து
மாறி மாறி அணைத்து
நடனமாடி மகிழத் துவங்கினாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக