ஜூலை 16, 2015

கண்ணக் குத்தும் சாமி

பிராயிலர் கோழி மிதித்து
நாட்டுக்கோழி குஞ்சு
செத்தது

கல் இருக்கிறது
நாயைக் கண்டு ஓடும்
மனிதன்

பொய் சொன்னா
கண்ணக் குத்தும் சாமி
ஒரு அரசியல்வாதியும் குருடரில்லை!

- ம. ரமேஷ் பழமொன்ரியுக்கள்

(நன்றி - பழமொன்ரியு கவிதை வகைமையை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக