ஜூலை 18, 2015

ஈரோடு தமிழன்பன் அவர்களின் - ஒரு கூடைப் பழமொன்ரியு புத்தகத்திலிருந்து சில பழமொன்ரியுக்கள்...

அத்தைக்கு மீசை முளைத்தால்
சித்தப்பா; மீசை இல்லாத
சித்தப்பா அத்தையாக முடியுமா? (ப.14)

கழுதை கெட்டால் குட்டிச்சுவர்
கெடாமல் இருந்தால் அதுக்குப்
பாராளு மன்றமா? (ப.16)

உண்டி சுருக்கல் பெண்டிர்க்கு
அழகு; தொப்பை பெருக்கல்
ஆணுக்கு அக்மார்க் அழகோ? (ப.18)

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்! குருக்கள் உள்ள
கோயிலில் வழிபட வேண்டாம். (ப.19)

- நன்றி - ஈரோடு தமிழன்பன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக