ஜூலை 30, 2015

எக்குடிக்கும் முதல் மகன் (கலாம்) நீ!

இந்தியாவிற்கு
முதல் குடிமகன் அல்ல நீ!
எக்குடிக்கும் முதல் மகன் நீ!
சுமக்க குடும்பம் இல்லாதிருக்கலாம்
இந்நியாவின் ஒவ்வொரு மனதும்
உன்னைச் சுமக்கத் தயாராகிவிட்டது.

வல்லராகி
நல்லரசாகும்…

நதிகள் இணையும்
நீர்ப் போக்குவரத்தும் தொடங்கும்…
இப்போதில்லையென்றாலும்
மாணவர்கள் இளைஞர்களாகி
அரசில்வாதிகளாகும்போதாவது…


நீயொருவன் கனவு கண்டாய்
ஒவ்வொரு கனவுமாய் நீயானாய்!


வரலாறாய் வீழ்ந்தவன்
நீ ஒருவன்தான்.
எழுவதென்னவோ
இனி ஒவ்வொரு மாணவருமாயிருப்பர்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக